நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகடிவதைக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்: கல்வியமைச்சுக்கு சுஹாகாம் வலியுறுத்து

கோலாலம்பூர்: 

பள்ளிகளில் நிகழும் பகடிவதை சம்பவங்களுக்கு எதிராக கல்வி அமைச்சு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மனித உரிமைகள் ஆணையம், சுஹாகாம் வலியுறுத்தியுள்ளது.

தற்போதை நடவடிக்கைகள் கடுமையாக இல்லை என்றும் இதனால் தொடர்ந்து பள்ளிகளில் பகடிவதை சம்பவங்கள் நிகழ்வதாகவும் சுஹாகாமின் குழந்தைகள் பிரிவு ஆணையர் டாக்டர் ஃபாரா நினி டுசுக்கி கூறினார். 

மாணவர்கள் கல்வி பயிலும் இடம் பாதுகாப்பானதாக இருப்பதைக் கல்வியமைச்சு உறுதி செய்ய வேண்டும் என்று ஃபாரா வலியுறுத்தினார்.

பகடிவதை சம்பவங்களால் மாணவர்களின் பாதுகாப்பு நிலை கேள்விக்குறியாகுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு வாரத்தில், 13 முதல் 15 வயதுடையவர்கள் சம்பந்தப்பட்ட மூன்று பகடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அவற்றில் ஒரு மாணவர் பள்ளி கட்டடத்திலிருந்து குதித்தது சம்பவமும் அடங்கும் என்று அவர் கூறினார்.

வழக்குகள் மதிப்பாய்வில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த கல்வியமைச்சைத் தொடர்பு கொண்டதாகவும், அமைச்சகம் அறிந்திருந்தாலும் இன்னும் தீர்க்கமாகச் செயல்படவில்லை என்றும்ஃபாரா கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset