நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போடியா- தாய்லாந்து எல்லைகளில் பதற்றம்: உடனடி போர் நிறுத்தம் கொண்டு வருக- மலேசியா வலியுறுத்தல் 

கோலாலம்பூர்: 

கம்போடியா- தாய்லாந்து எல்லைகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மலேசியா வலியுறுத்துவதாக வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் கூறினார். 

இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா தயாராக உள்ளதாக அமைச்சர் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து, கம்போடியா நாட்டு தலைவர்களைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்பு கொண்டு பேசினார் என்று அமைச்சர் தெரிவித்தார். 

முன்னதாக, கம்போடியா- தாய்லாந்து எல்லைகளில் ஏற்பட்ட கலவரத்தில் 14 பேர் வரை பலியானதாக தாய்லாந்து சுகாதார அமைச்சரகம் தெரிவித்திருந்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset