நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொஹான் செத்தியாவில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது 

கோலாலம்பூர்: 

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஜொஹான் செத்தியாவில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இன்று காலை முதல் காற்றின் தரமானது 152ஆக பதிவு செய்யப்பட்டதாக காற்று தர குறியீடு அமைப்பு தெரிவித்தது. 

மேலும், சில பகுதிகளான தஞ்சோங் மாலிமில் 93, பெட்டாலிங் ஜெயாவில் 94, நீலாய், நெகிரி செம்பிலானில் 85 ஆக காற்றின் தரம் பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், பினாங்கு, பெர்லீஸ், கெடா ஆகிய மாநிலங்களில் காற்றின் தரம் சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புகைமூட்டம் தொடர்பான அண்மைய நிலவரங்களைப் பொதுமக்கள் APIMS அகப்பக்கம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset