நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாங்காயில் ஜோ லோ இருப்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை: சைபுடின்

கோலாலம்பூர்:

ஷாங்காயில் ஜோ லோ இருப்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

ஆஸ்திரேலிய கடப்பிதழைப் பயன்படுத்தி தப்பியோடிய ஜோ லோ சீனாவின் ஷாங்காயில் வசித்து வருவதாக  புகார்கள் எழுந்துள்ளது.

ஆனால் இது தொடர்பில் போலிசாருக்கு எந்த நம்பகமான ஆதாரமும் கிடைக்கவில்லை.

மேலும் ஜோ லோவின் இருப்பிடத்தை துல்லியமாக உறுதிப்படுத்த அனைத்துலக சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் தனது தரப்பு நெருக்கமாக பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பில் போலிஸ்படை மூலம் உள்துறை அமைச்சு அனைத்துலக சட்ட அமலாக்க நிறுவன அதிகாரிகளுடன் நெருக்கமான,  தொடர்ச்சியான ஒத்துழைப்பை மேற்கொள்கிறது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

இதுவரை அவரிம் இருப்பிடம், கடப்பிதழ் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் எந்தவொரு செல்லுபடியாகும் உண்மையான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset