
செய்திகள் மலேசியா
ஜம்ரி வினோத் - ஃபிர்டாவ்ஸ் வோங் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது: டத்தோ லோகபாலா
கோலாலம்பூர்:
பிரதமர் துறையின் சட்ட, நிறுவன சீர்திருத்தம் அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவலைக் குறித்து கவலையும் மிகுந்த ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இதனை தெரிவித்தார்.
இன, மதத்தைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக நாடெங்கிலும் 900க்கு மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருந்த போதிலும், ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் வோங் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று அவர் கூறியிருப்பது நம்மை நெஞ்சை உடைக்கும் வகையில் உள்ளது.
மேலும் நாட்டின் சட்ட ஆட்சி அடிப்படைகளை எதிர்த்து நிற்கும் வகையிலும் உள்ளது.
நம் நாடு ஒருமித்து முன்னேற முயலும் இந்த வேளையில், இனம், மதம் தொடர்பான விவகாரங்களில் நடவடிக்கை எடுக்காமை, மிகவும் ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு அச்சம் இன்றி, நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும்.
சமூகங்களை பிளப்பதற்கும், இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் வகையிலும், கலாச்சாரத்தை அலட்சியப்படுத்தும் வகையிலும் தொடர்ந்து கருத்துகள் தெரிவிக்கிற, எந்தவிதமான பயமோ தடையோ இன்றி செயல்படுவது ஏற்க இயலாத ஒன்றாகும்.
இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படாதது 3ஆர் விதிகள் உண்மையாகவும், சமமாகவும் செயல்படுகிறதா என்ற கேள்விகளை ஏற்படுத்துகிறது.
900க்கும் மேற்பட்ட புகார்கள் ஒவ்வொன்றும் ஒரு மலேசிய குடிமகனின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
நாட்டின் பன்முக இன, மதம், அரசியலமைப்புச் சாசனத்தை காத்து நின்று சட்டங்களை மீறுவோர் யார் என்கிறபோதும், உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டத்தோ லோகா பாலா தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm