நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் வோங் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்ற அரசாங்கத்தின் முடிவை வன்மையாக கண்டிக்கிறோம்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் வோங் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்ற  அரசாங்கத்தின் முடிவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

இந்து சமயத்தை தொடர்ந்து இழிவுப்படுத்தும் ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் வோங் மீது நூற்றுக்கணக்கான புகார்கள் செய்யப்பட்டன.

ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என ஏஜிசி கூறிவிட்டது.

இதனை பிரதமர் துறையின் சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா மக்களவையில் தெரிவித்தார்.

ஏஜிசி, அரசாங்கத்தின் இந்த முடிவு ஒட்டுமொத்த இந்துக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

குறிப்பாக 3ஆர் விதிகள் என்பது ஒரு தனிப்பட்ட மதத்தினருக்கு மட்டும் தானா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதன் அடிப்படையில் தான் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் கட்சி பேதமின்றி இந்த.  இவ்விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்ற ஏஜிசி,  சட்டத்துறை அமைச்சர் குறிப்பாக அரசாங்கத்தின் முடிவுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்.

எங்களை பொறுத்த வரையில் எந்த மதத்தை இழிவுப்படுத்தினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக இந்து மதத்தை இழிவுப்படுத்தியவர்கள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஸ்ரீ சரவணன் இதனை வலியுறத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset