
செய்திகள் மலேசியா
சிறுகுற்ற வழக்குகளுக்கான பதிவுகளை நீக்க உள்துறை அமைச்சு சட்டம் 7-இல் திருத்தம் செய்கிறது: சைஃபுடின்
கோலாலம்பூர்:
குற்றவாளிகள் மற்றும் விரும்பத்தகாத நபர்களைப் பதிவு செய்யும் சட்டம் 1969 (சட்டம் 7) இல் செய்ய முன்மொழியப்பட்ட திருத்தங்களில் 'spent' வழிமுறையை அறிமுகப்படுத்துவதும் அடங்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த வழிமுறை, நியாயமான காலத்திற்குள் புதிய குற்றங்களைச் செய்யாத நபர்களை குற்றப் பதிவேட்டில் 'பதிவு இல்லாதவர்கள்' என்று கருத அனுமதிக்கும் என்றார்.
முன்மொழியப்பட்ட திருத்தம், முன்னர் பதிவு செய்யப்பட்ட தனிநபர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடர இரண்டாவது வாய்ப்பை வழங்கும் என்று அவர் கூறினார்.
அதாவது பணியிடத்தில் நுழைவது மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்கள் படிப்பை மேற்கொள்வது போன்றவை இதில் அடங்கும் என்றார் அவர்.
குற்றவாளிகளின் பதிவேட்டில் சட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது அட்டவணைகளில் பட்டியலிடப்பட்டுள்ள குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட நபர்களைப் பதிவு செய்வதற்கான சட்டப்பூர்வ அதிகாரமான சட்டம் 7 ஐத் திருத்தும் பணியில் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் ஏற்கனவே மே 21 அன்று அமைச்சரவையால் கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தச் செயல்முறை, தற்போது நடைபெறும் நிர்வாக அமர்வின் மூலம் பல்வேறு பங்குதாரர்களின் கருத்துக்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.
மேலும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு இது பரிசீலனை செய்யப்படும் என்று நாடாளுமன்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் அவர் கூறினார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நன்னடத்தையுடன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒருவரின் சிறிய குற்றப் பதிவுகளை நீக்குவதன் பரிசீலனை குறித்து வோங் சென் எழுப்பிய கேள்விக்குச் சைஃபுடின் இவ்வாறு பதிலளித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm