
செய்திகள் மலேசியா
588 சட்டப் பிரிவின் விதிகளை மீறியதால் Edisi Siasat, Edisi Khas டெலிகிரெம் பக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது: ஃபஹ்மி ஃபாட்சில்
கோலாலம்பூர்:
தகவல் தொடர்பு பல்லூடகச் சட்டம் 1998 உட்பிரிவு சட்டம் 588-இன் கீழ் உள்ள விதிகளை மீறிய உள்ளடக்கத்தைப் பகிர்ந்ததால் Edisi Siasat, Edisi Khas ஆகிய இரு டெலிகிரெம் பக்கங்களின் நிர்வாகிகள் மீது சிவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
இந்த டெலிகிரெம் பக்கங்களை முடக்கம் செய்ய நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
அதில் பதிவேற்றம் செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டதோடு அவை முடக்கம் செய்யப்பட்டுள்ளதை ஃபஹ்மி உறுதிப்படுத்தினார்.
Edisi Siasat, Edisi Khas ஆகிய இரு டெலிகிரெம் பக்கங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது என்றார் அவர்.
Edisi Siasat, Edisi Khas போன்ற டெலிகிரெம் பக்கங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு என்ன உத்தரவாதம் அளிக்கின்றது என்று நாடாளுமன்றத்தில் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சூடின் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஃபஹ்மி இவ்வாறு பதிலளித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm