நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இத்தாலியின் டோலோமைட்ஸ் மலை ஏறும் போது தவறி விழுந்த மலேசிய மருத்துவர் மரணம்

கோலாலம்பூர்:

இத்தாலியின் டோலோமைட்ஸ் மலை ஏறும் போது  தவறி விழுந்த மலேசிய மருத்துவர் மரணமடைந்தார்.

மலையேறும் போது காணாமல் போனதாகக் கூறப்படும் 60 வயது மலேசிய மருத்துவர் இறந்து கிடந்தார்,

அவர் ஒரு பாறையிலிருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.

மரணமடைந்தவர் கெடாவின் சுங்கைபட்டானியில் உள்ள மெட்ரோ மருத்துவமனையின் மருத்துவ நிபுணரான டாக்டர் காவ் பீ லிங் என அடையாளம் காணப்பட்டது.

கடந்த ஜூலை 18ஆம் தேதி ஆம்பெஸ்ஸோ,  பிரைஸ் டோலோமைட்ஸ் இடையே அமைந்துள்ள குரோடா டெல் பெக்கோ என்ற மலையில் மலையேற்றம் மேற்கொண்டபோது காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

டாக்டர் காவ் ஒரு நண்பருடன் மலையேற்றம் மேற்கொண்டபோது அவர்கள் தனித்தனியாக செல்ல முடிவு செய்தனர்.

அவரது நண்பர் திரும்பி வந்தபோது, டாக்டர் காவ் சிகரத்திற்கு ஏறுவதைத் தொடர்ந்தார்.

இந்நிலையில் தான் இச்சம்பவம் நிகழ்ந்ததாக இத்தாலி செய்தி நிறுவனங்கள் கூறின.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset