நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறு, குறு, நடுத்தர வணிகர்களுக்கான உதவிகள் நீண்டக் கால திட்டங்களாக வகுக்க வேண்டும்: அருள்குமார்

நீலாய்:

சிறு, குறு, நடுத்தர வணிகர்களுக்கான உதவிகள் நீண்டக் கால திட்டங்களாக வகுக்க வேண்டும்.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற உறுப்பினர் அருள்குமார் இதனை வலியுறுத்தினார்.

மித்ரா வழங்கிய 7 லட்சம் ரிங்கிட்டை கொண்டு நெகிரி செம்பிலான் இந்தியர் வர்த்தக தொழிலியல் சபையினர் வணிகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி தந்து வருகின்றனர்.

சிரம்பான், போர்ட்டிக்சனை தொடர்ந்து இன்று நீலாயில் வணிகத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.

இதுவொரு மகத்தான திட்டம். இத்திட்டம் நிச்சயம் சிறு, குறு, நடுத்தர வணிகர்களுக்கு பயனாக இருக்கும் என நம்புகிறேன்.

மேலும் பணமாக கொடுக்காமல் வணிகத்திற்கு தேவையான பொருட்களை வழங்குவது அவர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்.

அதே வேளையில் உதவிகள் நீண்டக் கால திட்டங்களாக வகுக்க வேண்டும்.

காரணம் அவ்வப்போது உதவிப் பொருட்களை வழங்குவதன் வாயிலாக வணிகர்கள் தங்களின் வியாபாரத்தை விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பாக அவர்களும் தங்களின் தொழிலில் வெற்றி பெறலாம் என்று அருள்குமார் கூறினார்.

மத்திய அரசாங்கத்தை போன்று மாநில அரசாங்கமும் சிறு, குறு, நடுத்தர வணிகர்களுக்கான உதவி திட்டங்களை கொண்டுள்ளது.

இந்த திட்டங்களை நம் சமுதாய வனிகர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset