
செய்திகள் விளையாட்டு
பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்
நியூயார்க்:
பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார். அவருக்கு வயது 71.
ஹல்க் ஹோகனின் மறைவு வருத்தமளிப்பதாக WWE அமைப்பு சொன்னது.
1980ஆம் ஆண்டுகளில் WWE உளகளாவிய அங்கீகாரத்தைப் பெற உதவியர்களில் ஒருவராகத் திரு ஹோகன் திகழ்ந்ததாக அந்த அமைப்பு எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.
ஹோகனின் மறைவுக்கு என்ன காரணம் என்பது குறிப்பிடப்படவில்லை.
1953இல் ஜார்ஜியாவில் பிறந்தவரான ஹோகனின் இயற்பெயர் டெரி ஜீன் போலியா.
1980ஆம் ஆண்டுகளில் மல்யுத்த போட்டி பிரபலமடைந்தபோது திரு ஹோகன் புகழ் பெற்றார்.
அப்போதைய உலக மல்யுத்த கூட்டமைப்பின் (WWF) அடையாளமாகவும் அவர் மாறினார்.
அவரது மிக முக்கியமான வெற்றிகளில் ஒன்று 1987ஆம் ஆண்டு பதிவானது.
அமெரிக்காவின் மிச்சிகனில் நடைபெற்ற WrestleMania III போட்டியில் அவர் மறைந்த ஆண்ட்ரே தி ஜெயண்ட் என்ற மல்யுத்த வீரரைத் தோற்கடித்தார்.
அது மல்யுத்த போட்டி வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற தருணங்களில் ஒன்றாக மாறியது.
மல்யுத்தம் தவிர்த்து திரு ஹோகன் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2025, 9:51 am
சோன் இயோங் மின்னை வாங்க லாஸ் ஏஞ்சல்ஸ் எப்சி ஆர்வமாக உள்ளது
July 26, 2025, 9:49 am
ஆல் ஸ்டார் ஆட்டத்தை தவறவிட்டதால் இந்தர்மியாமி அணிக்காக மெஸ்ஸி விளையாட மாட்டார்
July 25, 2025, 10:20 am
மால்டினியின் சட்டையை அணிந்து ஏசிமிலானின் நிர்வாகத்தை கேலி செய்யும் தியோ ஹெர்னாண்டஸ்
July 25, 2025, 10:18 am
2026 உலகக் கிண்ண போட்டியில் லியோனல் மெஸ்ஸி விளையாடுவார்: அர்ஜெண்டினா
July 24, 2025, 9:16 pm
தேக்குவாண்டோ விளையாட்டாளர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்: மாஸ்டர் நாகராஜன்
July 24, 2025, 10:33 am
செல்சி நட்சத்திரம் லியம் டெலாப்பின் காதலுக்கு முற்றுப்புள்ளி
July 24, 2025, 10:26 am
புதிய தாக்குதல் ஆட்டக்காரர் இல்லாமல் புதிய பருவத்தை தொடங்கவுள்ளது மன்செஸ்டர் யுனைடெட்
July 24, 2025, 7:09 am