நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேருந்தில் இருக்கை பட்டை அணியாத 1,200 பயணிகளுக்கு அபராதம்

கோலாலம்பூர்:

நாட்டில் பேருந்தில் இருக்கை பட்டை அணியாத ஓட்டுநர்கள், பயணிகள் உட்பட 1,200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து நாட்டில்  பேருந்தில் இருக்கை பட்டை அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

விரைவுப் பேருந்து, சுற்றுலாப் பேருந்துகள் ஆகிய இரண்டுக்கும் புதிய விதிமுறை பொருந்தும்.

மீறுவோருக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சு கூறியது. 

புதிய விதிமுறை பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று அபராதம் விதிக்கப்பட்ட சிலர் கூறினர்.

ஆனால் அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இருக்கை பட்டை கட்டாயம் அணிய வேண்டும் என்ற எச்சரிக்கைக் குறிப்புகள் பேருந்துகளில் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றைக் கண்டுகொள்ளாமல் சாக்குப்போக்குச் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுப்பயணிகளோ வெளிநாட்டினரோ அனைவருக்கும் புதிய விதிமுறை பொருந்தும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் பேராக் மாநிலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் மாண்டனர்.

அதனால் புதிய விதிமுறை கட்டாயமாக்கப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset