
செய்திகள் மலேசியா
வங்கி பணப்பட்டுவாடா அட்டை மூலம் பண மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார்
கோலாலம்பூர்:
வங்கி பணப்பட்டுவாடா அட்டை மூலம் பணமோசடி நிகழ்த்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட 21 பேர் AH LONG யிடம் பணம் வாங்க சென்று அவர்களின் வங்கி பணப்பட்டுவாடா அட்டை மோசடிக்கு உள்ளாகியுள்ளதாக உரிமை கட்சி சார்பில் செகு சேகர் கூறினார்.
21 பேரின் ATM CARDஐ பயன்படுத்தி மோசடி நடந்துள்ளதால் பாதிக்கப்பட்ட மக்கள் யாவரும் இவர்களுக்கு எதிராக போலீஸ் புகார்களை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் 21 பேர் மீது போலீஸ் புகார் செய்யப்பட்ட நிலையில் இதில் சிக்காமல் இருக்கும் உண்மையான சந்தேக நபரை போலீஸ் கண்டுப்பிடிக்க வேண்டும் என்று உரிமை கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று செகு சேகர் குறிப்பிட்டார்.
Ah Long யிடம் பணம் வாங்கி தருவதாக கூறி சந்தேக நபர் பாதிக்கப்பட்டவர்களை ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளைத் திறக்க வலியுறுத்தினார்.
இதன் அடிப்படையில் புதிதாக திறக்கபப்ட்ட வங்கி கணக்குகளின் ATM CARD அட்டைகளை சந்தேக நபர் மோசடிக்குப் பயன்படுத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது.
Ah Long யிடம் பணம் வாங்கியது மட்டுமே அறிந்த பாதிக்கப்பட்ட நபர்கள், தாங்கள் மோசடிக்கு ஆளானதை அவர்கள் அறியவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், இந்த 21 பேர் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. 21 பேரில் ஒருவர் மீது குற்றவியல் சட்டம் பாய்ந்தது. இருப்பினும், பிணைத்தொகை செலுத்தி அவரும் விடுவிக்கப்பட்டார்.
ஒட்டுமொத்த புகாரும் இவர்கள் மேலே உள்ளது. ஆனால் இதற்கு மூல காரணமாக உள்ள அந்த மோசடி பேர்வழி குறித்து தகவல் எதுவும் இல்லை.
ஆக, இது தொடர்பாக டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய வந்ததாக அவர் சொன்னார். மேலும், புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வு துறையிடம் இந்த விவகாரம் குறித்து மகஜர் ஒன்று சமர்பிக்கப்படும் என்று சேகர் சொன்னார்.
முன்னதாக, டாங் வங்கி போலீஸ் நிலையம் முன்பு நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரிமை கட்சியின் துணைத் தலைவர் டேவிட் மார்ஷல், வழக்கறிஞர் தினேஷ், செகு சேகர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2025, 9:41 am
தாய்லாந்து – கம்போடியா மோதலைத் தீர்க்க மலேசியா தயார்: முஹம்மத் ஹசான்
July 26, 2025, 9:31 am
தாய்லாந்து - கம்போடியா இடையிலான மோதலை அரசு எளிதாகக் கருதவில்லை: பிரதமர் அன்வார்
July 25, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பேரப்பிள்ளை வீட்டில் கொள்ளை: 1.8 மில்லியன் ரிங்கிட் வரை இழப்பு
July 25, 2025, 10:17 pm
தகவல் தொடர்பு தரவு ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து பொது ஆலோசனை பிரிவை எம்சிஎம்சி தொடங்கியுள்ளது
July 25, 2025, 5:27 pm
பிரதமரை நம்பி அவரின் சீர்த்திருந்த திட்டங்களை தொடர்வோம்: குணராஜ்
July 25, 2025, 5:04 pm