
செய்திகள் மலேசியா
ஆயுதமேந்திய கொள்ளை கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
கோலாலம்பூர்:
ஆயுதமேந்திய கொள்ளை கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 2022 முதல் ஆயுதமேந்திய கொள்ளைகள், வீடு திருட்டு கும்பலின் முக்கிய மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு வெளிநாட்டு நபர்கள் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
இவர்களால் இதுவரை 3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது.
மேலும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளது.
ஹோண்டா சிவிக் காரில் பயணித்த இரண்டு சந்தேக நபர்களும் செராஸின் தாமான் பெர்டாமா பகுதியில் சென்றதை அதிகாரிகள் கண்டனர்.
அதன் பின்னர் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை, பகாங் போலிஸ் குழு இன்று அதிகாலை 3.45 மணியளவில் நடத்திய ஓப் அமான் 6 மூலம் குற்றத் தடுப்பு நடவடிக்கையில் அவர்கள் கொல்லப்பட்டனர்.
சோதனை நோக்கங்களுக்காக காவல்துறையினர் தங்கள் காரை இடைமறிக்க முயன்றபோது சந்தேக நபர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டனர்.
இதனால் இந்த சம்பவம் நடந்ததாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் செயல் இயக்குநர் டத்தோ ஃபாடில் மார்சஸ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2025, 9:41 am
தாய்லாந்து – கம்போடியா மோதலைத் தீர்க்க மலேசியா தயார்: முஹம்மத் ஹசான்
July 26, 2025, 9:31 am
தாய்லாந்து - கம்போடியா இடையிலான மோதலை அரசு எளிதாகக் கருதவில்லை: பிரதமர் அன்வார்
July 25, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பேரப்பிள்ளை வீட்டில் கொள்ளை: 1.8 மில்லியன் ரிங்கிட் வரை இழப்பு
July 25, 2025, 10:17 pm
தகவல் தொடர்பு தரவு ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து பொது ஆலோசனை பிரிவை எம்சிஎம்சி தொடங்கியுள்ளது
July 25, 2025, 5:27 pm
பிரதமரை நம்பி அவரின் சீர்த்திருந்த திட்டங்களை தொடர்வோம்: குணராஜ்
July 25, 2025, 5:04 pm