நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாயாப் பல்கலைக்கழக தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் காவிய அரங்கம் 2025: ஜூலை 26ஆம் தேதி நடைபெறவுள்ளது 

கோலாலம்பூர்: 

மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் கலை பண்பாட்டுச் செயலவையின் தலைமையில் அரங்கேறவிருக்கிறது காவிய அரங்கம் 2025. 

எதிர்வரும் ஜூலை 26ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மலாயாப் பல்கலைக்கழக ஆக்கக்கலைப் புலத்தின் ஆய்வரங்கத்தில் காவிய அரங்கம் 2025 அரங்கேறவுள்ளது. 

முத்தமிழில் ஒன்றான நாடகக்கலையைப் பேணி காக்கும் முயற்சியில் மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப்பேரவையின் 66ஆவது செயலவை குழுவினர் முனைப்பு காட்டியுள்ளனர். 

ஒரு திருமண வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளை மையமாக கொண்ட நாடக விருந்தை இவ்வாண்டு தமிழ்ப்பேரவை பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதாக சுவரொட்டி மூலமாக தெரிவித்துள்ளனர். 

2025 காவிய அரங்கம் திட்டத்தின் தலைவராக தீபன் சுகுமாறனும் மேடை நாடகத்தின் தலைமை பொறுப்பாளராக பிரேம்நாத் சுப்ரமணியமும் பொறுப்பேற்றுள்ளனர். 

மேல் விபரங்களுக்கு காவிய அரங்கம் 2025 திட்டத்தின் தலைவர் தீபன் சுகுமாறனை 012-6815203 என்ற கைப்பேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset