நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எதிர்கால தொழிலாளர் சக்திக்கு திவேட் முக்கிய தூண் எனும் அரசாங்கத்தின் கொள்கையை மலேசிய தொழிலாளர்கள் கூட்டமைப்பு முழுமையாக ஆதரிக்கிறது: டத்தோ டாக்டர் சைட் ஹுசைன்

கோலாலம்பூர்:

நாட்டின் எதிர்கால தொழிலாளர்கள் சக்திக்கு திவேட் முக்கிய தூண் எனும் அரசாங்கத்தின் கொள்கையை மலேசிய தொழிலாளர் கூட்டமைப்பு முழுமையாக ஆதரிக்கிறது.

மலேசிய தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் டத்தோ டாக்டர் சைட் ஹுசைன் சைட் ஹுஸ்மான் கூறினார்.

திவேட் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்த துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் பின் ஹாஜி ஹமிடியின் உறுதியான தலைமையை கூட்டமைப்பு பாராட்டுகிறது.

மேலும் திவேட்டை மிக உயர்ந்த மட்டத்திற்கு உயர்த்துவதில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் ஆர்வம், அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத நம்பிக்கைக்காக கூட்டமைப்பு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

திவேட் என்பது வெறும் மலேசிய முயற்சி மட்டுமல்ல. அது ஒரு உலகளாவிய நிலையில் அங்கீகாரம் பெற்ற ஒரு திட்டமாகும்.

உலகெங்கிலும் திவேட் கல்வியை அறிவு, திறன்களை தாண்டி வாழ்நாள் முழுவதும் வேலை

வாய்ப்பு பெறுவதற்கான ஒரு முக்கிய, நம்பகமான மாற்றுப் பாதையாக அங்கீகரித்து வருகின்றன.

இந்த உலகளாவிய மாற்றத்தில் மலேசியா முன்னணியில் உள்ளது.

மேலும் எதிர்காலத்தில் 5, 6, 7, 8 நிலைகளில் மலேசிய திறன் சான்றிதழ்களின் முற்போக்கான

முன்னேற்றங்களை கூட்டமைப்பு பாராட்டுகிறது.

எந்தவொரு நிறுவனத்திலும் வெற்றி என்பது கல்வி அறிவு, பயன்பாட்டு திறன்களுக்கு இடையிலான வலுவான ஒருங்கிணைப்பைப் பொறுத்தது என்று கூட்டமைப்பு உறுதியாக நம்புகிறது.

திவேட் பட்டதாரிகள் இன்றைய வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிலப்பரப்பில் அவசியமான நடைமுறைத் திறன்கள், புதுமை, தகவமைப்புத் திறனைக் கொண்டு வருகிறார்கள்.

இந்த இரட்டைக் கல்வி உத்தியாகும்.

திவேட் மூலம், நிறுவனங்கள் வெற்றிகரமான எதிர்காலத்திற்குத் தயாரான பணியாளர்களை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.

மலேசியாவின் திவேட் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதுடன் உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப அதை அளவுகோலாக மாற்ற வேண்டும்.

இதற்காக அனைத்துலக தொழிலாளர் அமைப்பு, அனைத்துலக முதலாளிகள் அமைப்பு போன்ற அனைத்துலக தளங்களிலும் மலேசிய தொழிலாளர் கூட்டமைப்பு தொடர்ந்து ஈடுபடுகிறது.

மேலும் திவேட் பட்டதாரிகளுக்கு ஆட்சேர்ப்பில் மட்டுமல்லாமல், தொழில் மேம்பாடு, தலைமைத்துவ மேம்பாடு மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றிலும் சம வாய்ப்புகளை வழங்குமாறு அனைத்து முதலாளிகளையும் தாம் கேட்டு கொள்வதாக டத்தோ டாக்டர் சைட் ஹுசைன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset