நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வணிகம் மேற்கொள்வதற்கான அடிப்படை பொருட்கள் வாங்கித் தரும் திட்டத்திற்கு மித்ரா கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்: திருநாவுக்கரசு

நீலாய்:

வணிகம் மேற்கொள்வதற்கான அடிப்படை பொருட்கள் வாங்கித் தரும் திட்டத்திற்கு மித்ரா கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்.

நெகிரி செம்பிலான் இந்தியர் வர்த்தக தொழிலியல் சபையின் தலைவர் திருநாவுக்கரசு இதனை கூறினார்.

கடந்தாண்டு 2023ஆம் ஆண்டு மித்ராவின் வாயிலாக நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்திற்கு 7 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.

சிறு குறு வணிகர்கள் வணிகம் மேற்கொள்வதற்கான அடிப்படை பொருட்கள் வாங்கி கொடுப்பதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 125 வணிகர்களுக்கு உதவும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் கட்டம் கட்டமாக வணிகர்களுக்கு இந்த வணிக உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இன்று நீலாயில் 15 வணிகர்களுக்கு கிட்டத்த 55 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன.

மித்ராவின் கீழ் வணிகர்களுக்கு உதவும் இத்திட்டம் மகத்தானது.

அதே வேளையில் இந்த உதவிக்கான தேவைகளும் அதிகம் உள்ளது.

காரணம் நாங்கம் செய்யும் நிகழ்வுகளில் புதியவர்கள் அதிகம் வந்து உதவிகளை கேட்கின்றனர்.

ஆககே இத்திட்டத்திறகான நிதியை மித்ரா அதிகரிக்க வேண்டும்.இதை எங்களின் கோரிக்கையாக முன்வைக்கிறோம்.

மேலும் இத்திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள வாய்ப்பு தந்த பிரதமர், மித்ராவின் தலைவர் பிரபாகரன் ஆகியோருக்கு நன்றி என திருநாவுக்கரசு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset