நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சனுசி துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடாவிட்டால் பாஸ் தோல்வியடையக்கூடும்: அரசியல் ஆய்வாளர் கருத்து

பெட்டாலிங் ஜெயா: 

கெடா மந்திரி புசார் சனுசி நோர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட மறுத்தால் பாஸ் தோல்வியடையக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர் எச்சரிக்கின்றார்.

இரு தவணைகள் மந்திரி பெசாராக செயல்படும் சனுசி தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவராவார். 

இளம் வாக்காளர்கள் உட்பட பாஸ் கட்சி ஆதரவாளர்களால் நன்கு அறியப்பட்ட தலைவராகவும் சனுசி திகழ்வதாக மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அவாங் அஸ்மான் பாவி தெரிவித்தார். 

சனுசி கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட மறுப்பு தெரிவித்தது கட்சியின் உயர்மட்டத் தலைமையில் சிக்கல் வராமால் தடுப்பதற்காக இருக்கலாம் என அவர் சுட்டிக் காட்டினார். 

அதுமட்டுமல்லாமல், சனுசி உயர்மட்ட தலைவர்களின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு செயல்படலாம் என்றும் அவாங் அஸ்மான் பாவி தெரிவித்தார்.

மேலும், சனுசியின் இந்த முடிவு கட்சியின் மூத்த தலைவர்கள் தாங்களாவே முன் வந்து கட்சியிலிருந்து விலகினால் மட்டும் புதிய தலைவர்கள் கட்சியை வழிநடத்த முடியும் என்பதை காட்டுவதாகவும் அவாங் குறிப்பிட்டார். 

பாஸ் கட்சியைப் புதிய தலைமைத்துவம் வழிநடத்தவில்லையென்றால் அந்த கட்சி திறமையான தலைவர்களையும் இளம் வாக்காளர்களையும் இழக்கக் கூடும் என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.

பாஸ் கட்சியின் சமயப் பிரிவு தலைவர் ஹாஷிம் ஜாசின் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் சனுசி போட்டியிட என்ற பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்தார்.

மேலும், கெடா மாநில மந்திரி பெசாராக அவருடைய செயல்திறன், கட்சியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு குறித்து ஹாஷிம் குறிப்பிட்டார். 

பாஸ் கட்சி தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் சிக்கல் இல்லாமல் நிலைத்து இருக்கலாம் என்று எண்ணினால் அக்கட்சி புதிய சிந்தனைகளையும் திறன் கொண்ட தலைவர்களையும் இழக்க நேரிடும் என்று ஹாஹிம் எச்சரிக்கை விடுத்தார்.

- அஸ்வினி செந்தாமரை

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset