
செய்திகள் மலேசியா
அனைத்து இன மக்களின் நலன், பொருளாதாரத்தை பாதுகாக்கும் பிரதமருக்கு நன்றி: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
அனைத்து இன மக்களின் நலன் பொருளாதாரத்தை பாதுகாக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு நன்றி.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
பிரதமரின் இன்றைய அறிவிப்பு, இனம், மதம், பின்னணியைப் பொருட்படுத்தாமல் மக்களின் நலனை பாதுகாப்பதில் மடானி அரசாங்கம் உறுதியாக உள்ளது என்பதை மீண்டும் தெளிவுப்படுத்தி உள்ளது.
உதவி நிதி, இலக்கு மானியங்கள், வாழ்க்கைச் செலவுக் குறைப்பு முயற்சிகள், சாதனை அளவிலான முதலீடுகள் உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட், ரோன் 95 பெட்ரோலின் விலை 1.99 ரிங்கிட்டாக குறைப்பு, டோல், மின்சாரக் கட்டணம் குறைப்பு, மடானி விற்பனைக்கு கூடுதலாக 600 மில்லியன் ரிங்கிட் ஆகிய திட்டங்கள் மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும்.
இவை இந்திய சமூகம் உட்பட சமூகத்தின் அனைத்து மட்டங்களின் தேவைகளுக்கான அரசாங்கத்தின் அக்கறையை பிரதிபலிக்கின்றன.
இது மற்றொரு மிக முக்கியமான, சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பாகும்.
இதன் அடிப்படையில் பிரதமருக்கு நான் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த முயற்சிகள் அனைத்தும் பகிரப்பட்ட செழிப்பை உறுதி செய்வதில் மடானி அரசாங்கத்தின் நியாயமான அணுகுமுறையின் வெளிப்பாடாகும்.
மடானி அரசாங்கம் அனைத்து மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சபா, சரவாக் மக்கள் ஆகியோருக்கான அக்கறை, நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் மலேசிய மக்களுக்காக செயல்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 24, 2025, 11:23 am
10 நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண உயர்வு ஒத்திவைப்பால் 10 லட்சம் பேர் பயனடைவர்: அலெக்சண்டர் நந்தா
July 24, 2025, 10:49 am
100 ரிங்கிட் சிறிய உதவித் தொகையல்ல; அரசாங்கத்தின் முயற்சிக்குக் குறை கூற : பிரதமர் அன்வார்
July 24, 2025, 10:12 am
பத்து பூத்தே விவகாரம் : மகாதீரின் மறுபதிலுக்குக் கருத்துக் கூற பிரதமர் அன்வார் மறுப்பு
July 24, 2025, 7:10 am