
செய்திகள் மலேசியா
100 ரிங்கிட் சிறிய உதவித் தொகையல்ல; அரசாங்கத்தின் முயற்சிக்குக் குறை கூற வேண்டாம்: பிரதமர் அன்வார்
பெட்டாலிங் ஜெயா:
தேசிய தினத்தை முன்னிட்டு 18 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்களுக்கு வழங்கப்படவுள்ள 100 ரிங்கிட் உதவித் தொகை சிறிய தொகையல்ல என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மேலும், மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்குக் குறை கூற வேண்டாம் என்றும் பிரதமர் அன்வார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
100 ரிங்கிட் உதவித் தொகைக்காக அரசு இம்முறை RM15 பில்லியன் நிதி ஒதுக்கியுள்ளதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
இது மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.
ஏழை குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருப்பின் ஆளுக்கு தலா 100 ரிங்கிட்டும் தம்பதிக்கு தலா 100 ரிங்கிட்டும் வழங்கப்படும். மொத்தமாக அவர்களுக்கு 400 ரிங்கிட் உதவித் தொகை கிடைக்கும்.
இதை தவிர்த்து அவர்களுக்கு, எஸ்டிஆர், சாரா உதவித் தொகையாக 300 ரிங்கிட்டும் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக அவர்களுக்கு 700 ரிங்கிட் கிடைக்கின்றது. அது சிறிய தொகையல்ல என்றும் பிரதமர் அன்வார் விளக்கினார்.
100 ரிங்கிட்டை வைத்து என்ன வாங்க முடியும் என்றும் குறை கூறுவதை நிறுத்துமாறு பிரதமர் அன்வார் வேண்டுகோள் விடுத்தார்.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் MyKad வழியாக RM100 வழங்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கிண்டலுக்கு அன்வார் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 25, 2025, 5:27 pm
பிரதமரை நம்பி அவரின் சீர்த்திருந்த திட்டங்களை தொடர்வோம்: குணராஜ்
July 25, 2025, 5:04 pm
பினாங்கு மாநிலத்தில் இருந்து டத்தோஶ்ரீ விருதை ஃபர்ஹாஷ் பெறவுள்ளார்
July 25, 2025, 5:03 pm
25 ஆண்டுகளுக்குப் பிறகு அன்வார் எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க துன் மகாதீர் தயாராகி வருகிறார்
July 25, 2025, 5:02 pm
பர்ஹாஷை விசாரிக்க எம்ஏசிசிக்கு போதுமான தகவல்கள் உள்ளன: ரபிசி
July 25, 2025, 4:06 pm
பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்க உதவ வேண்டும்- போலீஸ் தரப்புக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆணை
July 25, 2025, 3:38 pm