நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிவேகக் கண்காணிப்பு முறை உட்பட 12 சாலைப் பாதுகாப்பு அம்சங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

கனரக வாகனங்களை உட்படுத்தும் சாலை விபத்துகளைத் தவிர்ப்பதற்காக அதிவேகக் கண்காணிப்பு முறை உட்பட 12 சாலைப் பாதுகாப்பு அம்சங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

கனரக வாகன ஓட்டுநர்களுக்கான தரவுத்தள அமைப்பையும் தனது அமைச்சகம் உருவாக்கி வருவதாகவும் அந்தோனி லோக் குறிப்பிட்டார். 

பொருள்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் சிறப்பு பாதுகாப்பு ஆய்வு மற்றும் தணிக்கை (JISA) நடவடிக்கைகளைச் செயல்படுத்தப்படுவதையும் அவர் உறுதிப்படுத்தினார். 

மேலும், சாலை போக்குவரத்து குற்றக் குறைபாட்டுப் புள்ளிகள் (KEJARA) அமைப்பும் மாற்றியமைக்கப்படும்.

தற்போது மேம்படுத்தப்பட்டு வரும் MyJPJ பயன்பாட்டின் மூலம் ஓட்டுநர்கள் தங்கள் குறைபாடுப் புள்ளிகளைச் சரிபார்க்க முடியும் என்றார் அவர்.

இடைநிறுத்தப்பட்ட ஓட்டுநர்களுக்கான பாடத்திட்டத்தைச் சாலை போக்குவரத்து துறை சீரமைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், அமலாக்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை அதிகரிக்க சாலை போக்குவரத்து துறை பணியாளர்களின் சட்டையில் கேமரா பொருத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது. 

கனரக வாகனங்களுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கை குறித்த  Shaharizukirnain Abd Kadir-இன் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset