நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10 நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண உயர்வு ஒத்திவைப்பால் 10 லட்சம் பேர் பயனடைவர்: அலெக்சண்டர் நந்தா

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் உள்ள 10 நெடுஞ்சாலைகளில் டோல்  கட்டண உயர்வு ஒத்திவைக்கப்பட்டதன் மூலம் சுமார் 941,000 நெடுஞ்சாலை பயனர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகப் பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

இந்த அறிவிப்பு தினசரி நெடுஞ்சாலை பயன்படுத்துவோர் குறிப்பாக வேலைக்குச் செல்பவர்களின் சுமையைக் குறைக்க உதவும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். 

முந்தைய நிர்வாகத்தால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களின்படி சம்பந்தப்பட்ட 10 நெடுஞ்சாலைகளில்  டோல் கட்டணம் இந்த ஆண்டு அதிகரிக்க திட்டமிடப்பட்டிருந்ததுச்

இருப்பினும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையை  மடானி அரசாங்கம் முழுமையாகப் புரிந்து கொள்கிறது  என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

 நிதி அமைச்சின் மூலம் அரசாங்கம் ஒப்பந்த நிறுவனங்களுக்கு  50 கோடி வெள்ளிக்கும்  அதிகமான இழப்பீட்டை வழங்கும் என்று அலெக்சாண்டர் நந்தா கூறினார்.

முன்னதாக,  பத்து  நெடுஞ்சாலைகளில் டோல்  கட்டண உயர்வை ஒத்திவைக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset