நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

13ஆவது மலேசியத் திட்டத்திற்கான பரிந்துரைகள் குறித்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விவாதிக்கப்பட்டது: பிரபாகரன்

கோலாலம்பூர்:

13ஆவது மலேசியத் திட்டத்திற்கான பரிந்துரைகள் குறித்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விவாதிக்கப்பட்டது.

மித்ரா தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பி. பிரபாகரன் இதனை கூறினார்.

13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைவில் அறிவிக்கவுள்ளார்.

இந்திய சமுதாயத்தின் மேம்பாடு குறித்து இத்திட்டத்தில்  இணைக்கப்பட வேண்டிய பரிந்துரைகள் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் தான் இன்றைய சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் கடந்த மே மாதம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு விரிவான திட்டத்தை அவர்களிடம் வழங்கப்பட்டது.

இது மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படும் ஒரு முயற்சியாகும்.

எதிர்கால தேசியக் கொள்கைகளில் இந்திய சமூகத்தின் குரல்கள், அபிலாஷைகள் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு இது போன்ற விவாதங்கள் மிகவும் முக்கியம்.

இந்த கூட்டு உறுதிமொழி நீண்டகால தீர்வுகள் மற்றும் பயனுள்ள செயல்படுத்தலுக்கு ஒரு யுக்தியாக இருக்கும் என்று பிரபாகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset