நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வர்த்தகத்திற்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதால் வர்த்தக உதவிகளை பெறுவது எளிமையாகும்: திருநாவுக்கரசு

சிரம்பான்:

வர்த்தகத்திற்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதால் வர்த்தக உதவிகளை பெறுவது எளிமையாகும்.

நெகிரி செம்பிலான் மாநில இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் தலைவர் திருநாவுக்கரசு வலியுறுத்தினார்.

வர்த்தகத்தில் கால்பதிக்க வேண்டும். அதன் மூலம் சாதிக்க வேண்டும் என இந்திய மக்களிடையே ஆர்வம் அதிகமாக இருக்கும்.

இந்த ஆர்வத்தைக் கொண்டு அவர்கள் சொந்தமாக ஒரு தொழிலை தொடங்குவார்கள்.

ஆனால் அவர்கள் வர்த்தகத்திற்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திருக்க மாட்டார்கள்.

வர்த்தக பதிவு, வங்கி கணக்கை கொண்டிருக்க மாட்டார்கள். குறிப்பாக வரி செலுத்திருக்க மாட்டார்கள்.

இதுபோன்ற சிக்கல்களால் அவர்களுக்கு அரசாங்கம், அரசு துறைகள், வங்கிகளின் வாயிலாக உதவிகள் கிடைப்பது சிக்கலாகும்.

இதன் அடிப்படையில் தான் இந்திய வர்த்தகர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.

ஆக நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள வர்த்தகர்கள் இதுபோன்ற கருத்தரங்குகளில் கலந்து பயன் பெற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset