நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியர்களுக்கான இலவச மின் சுற்றுலா விசா; 2026 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது: இந்திய தூதரகம்

கோலாலம்பூர்:

மலேசியர்களுக்கான இலவச மின் சுற்றுலா விசா நடைமுறை 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவுக்கான இந்திய தூதரகம் ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை அறிவித்தது.

இந்தியாவுக்கு செல்லும் மலேசியர்களுக்கான இலவச சுற்றுலா விசா வழங்கப்பட்டு வந்தது.

இந்த இலவச விசா திட்டத்தை இந்திய அரசாங்கம் தொடர்ந்து நீட்டித்துள்ளது.

இலவச விசா இரட்டை நுழைவுடன் 30 நாள் செல்லுபடியாகும். குறிப்பாக இதற்கு எந்த கட்டணமம் இல்லை.

அடுத்தாண்டு 2026 டிசம்பர் 31ஆம் தேதி வரை இது அமலில் இருக்கும்.

மேலும் மலேசியர்கள் https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இதனை தவிர்த்து லேசியா முழுவதும் ஆறு நகரங்களில் உள்ள இந்திய தூதரக விண்ணப்ப மையங்களிலிருந்து (M/s IVS குளோபல் சர்வீசஸ், வலைத்தளம்: icacmalaysia.com க்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்டது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset