நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்து பூத்தே விவகாரம் : மகாதீரின் மறுபதிலுக்குக் கருத்துக் கூற பிரதமர் அன்வார் மறுப்பு

புத்ரா ஜெயா: 

பத்து பூத்தே விவகாரம் தொடர்பாகத் தம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர அழைப்பு விடுத்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் செயலுக்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்துக் கூற மறுத்துள்ளார்.

நிதியமைச்சகத்தின் மாதாந்திரக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதை பற்றி பேச விருப்பம் இல்லை. அந்த விவகாரத்தை விட்டு விடுங்கள் என்று கூறி சென்றார் பிரதமர் அன்வார்.

முன்னதாக நேற்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் பத்து பூத்தே விவகாரத்தில் வயதைக் காரணம் காட்டி தம் மீது குற்றக் கூறுகள் இருப்பதாக கருதினால் நீதிமன்றத்தில் தனக்கெதிராக வழக்கு தொடருமாறு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு அழைப்பு விடுத்தார்.

அதுமட்டுமல்லாமல், குற்றம் செய்தவர்கள் என்று கருதுபவர்களுக்குத் தான் விலக்கு தேவை என்றும் அது தனக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset