நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் வோங், ரிதுவான் தீ எதிராக மக்கள் செய்த புகார்கள் ஆதாரங்கள் இல்லையா?:  கணபதி ராவ் கேள்வி

கோலாலம்பூர்:

சர்ச்சைக்குரிய ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் வோங், ரிதுவான் தீ எதிராக மக்கள் செய்த புகார்களும் அவர்களின் பதிவுகளும் ஆதாரங்களாக பயன்படுத்த முடியாதா?.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் இக்கேள்வியை எழுப்பினார்.

ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் வோங், ரிதுவான் டீ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என ஏஜிசி கூறியுள்ளது.

மேலும் இது குறித்து பிரதமர் துறையின் சட்டம்,  நிறுவன சீர்திருத்த அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மானின் சமீபத்திய பதிலால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.

குறிப்பாக அவர்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான போலிஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் அவர்கள மீது  குற்றஞ்சாட்ட போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அதிர்ச்சியாக உள்ளது.

அமைச்சரின் இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது பொதுமக்களுக்கு ஒரு ஆபத்தான செய்தியையும் அனுப்புகிறது.

பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டும் வீடியோக்கள், அறிக்கைகள்,  சமூக ஊடக பதிவுகள் பொதுவில் பரவலாகவும் இருக்கும்போது போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற கூற்று நீதியை மீறுகிறது.

சிறுபான்மை மதங்களின் உணர்வுகளை அவமதிப்பவர்கள் அல்லது தூண்டுபவர்கள் ஏன் சுதந்திரமாக நடக்க அனுமதிக்கப்படுகிறார்கள்,

ஆனால் மற்றவர்கள் விரைவாக கைது செய்யப்படுகிறார்கள்? என்று மலேசியர்களிடையே ஒரு அடிப்படைக் கேள்வி எழுகிறது.

மேலும் சட்டம் என்பது ஒரு சிலருக்கும் ஒரு இனத்தவருக்குமானது  என்ற நிலை உருவாக வேண்டும்

அனைவருக்கும் சட்டமும் நீதியும் சரிசமமாக இருக்க வேண்டும்.

ஆக இந்த நபர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து புகார்களையும் சமூக வலைத்தள பதிவுகளை  ஆதாரங்களாக கொண்டு அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.

அதே வேளையில் இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் முழு விளக்கத்தை தர வேண்டும் என்று கணபதிராவ் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset