
செய்திகள் மலேசியா
பேங்க் ரக்யாத், யூனிஃபை உடனான கருத்தரங்கு; நெகிரி மாநில இந்திய வர்த்தகர்களுக்கு பயனளித்தது: டாக்டர் கருடா சிவா
சிரம்பான்:
பேங்க் ரக்யாத், யூனிஃபை உடனான சிறப்பு கருத்தரங்கு நெகிரி செம்பிலான் மாநில இந்திய வர்த்தகர்களுக்கு பெரும் பயனாக அமைந்தது.
நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் கருடா சிவா கூறினார்.
வங்கிகள் வழங்கும் கிராண்ட், கடனுதவி உட்பட பரவலாக உள்ள வர்த்தக வாய்ப்புகளை இந்திய வர்த்தகர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.
கிட்டத்தட்ட 100 இந்திய வர்த்தகர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
யூனிஃபை வர்த்தக நிறுவனம் 5,000 ரிங்கிட் மதிப்புள்ள வர்த்தக உதவித் தொகையை எப்படி கோருவது குறித்து விளக்கமளித்தனர்.
அதே போன்று பேங்க் ரக்யாட்டில் உள்ள வாய்ப்புகள் குறித்து அதன் அதிகாரிகள் விளக்கம் தந்தனர்.
குறிப்பாக கலந்து கொண்ட வர்த்தகர்களிடையே நெட்வோர்க்கிங் அங்கமும் நடந்தது.
ஆக இக்கருத்தரங்கு நமது இந்திய வர்த்தகர்களுக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது.
வரும் காலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று டாக்டர் கருடா சிவா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 24, 2025, 11:23 am
10 நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண உயர்வு ஒத்திவைப்பால் 10 லட்சம் பேர் பயனடைவர்: அலெக்சண்டர் நந்தா
July 24, 2025, 10:49 am
100 ரிங்கிட் சிறிய உதவித் தொகையல்ல; அரசாங்கத்தின் முயற்சிக்குக் குறை கூற : பிரதமர் அன்வார்
July 24, 2025, 10:12 am
பத்து பூத்தே விவகாரம் : மகாதீரின் மறுபதிலுக்குக் கருத்துக் கூற பிரதமர் அன்வார் மறுப்பு
July 24, 2025, 7:10 am