நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் எதிர்ப்பு பேரணியின் போது கோலாலம்பூரில் சாலைகள் மூடப்படாது: போலீஸ் தகவல் 

கோலாலம்பூர்: 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக அன்வார் எதிர்ப்பு பேரணி ஜூலை 26ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. 

இந்த பேரணியில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் கோலாலம்பூரில் சாலைகள் எதுவும் மூடப்படாது என்று கோலாலம்பூர் இடைக்கால போலீஸ் தலைவர் USUF JAN MOHAMAD கூறினார். 

பேரணியில் கலந்து கொள்பவர்கள் மஸ்ஜித் நெகாரா, பாசார் செனி, சுல்தான் அப்துல் சமாட், சோகோ பேரங்காடி ஆகிய பகுதிகளில் கூடி டத்தாரான் மெர்டேக்கா நோக்கி பேரணி நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரிக்காத்தான் நேஷனல் பேரணி நடத்துகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset