
செய்திகள் மலேசியா
கூடுதல் விடுமுறைக்கு முதலாளிகள் இணக்கம் தெரிவிக்க வேண்டும்: ஸ்டிவன் சிம்
கோலாலம்பூர்:
இவ்வாண்டு மலேசியத் தினக் கொண்டாட்டத்துடன் இணைந்து செப்டம்பர் 15 -ஆம் தேதியை கூடுதல் பொது விடுமுறைக்கு முதலாளிகள் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டிவன் சிம் தெரிவித்தார்.
பிரதமரின் அறிவிப்பை முதலாளிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
முதலாளிகள் கூடுதல் பொது விடுமுறைக்கு இணக்கம் தெரிவித்து வழக்கமான சம்பளத்தை வழங்கலாம் அல்லது பொது விடுமுறை விகிதங்களின்படி வேலை செய்து ஊதியம் வழங்குமாறு தங்கள் ஊழியர்களுக்குத் தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.
தங்கள் ஊழியர்கள் அந்த பொது விடுமுறையில் வேலை செய்ய வேண்டியிருந்தால், முதலாளிகள் வேறொரு நாளில் மாற்று விடுமுறையை வழங்கவும் தேர்வு செய்யலாம் என்றார் ஸ்டிவன் சிம்.
கூடுதல் பொது விடுமுறையை செயல்படுத்துவது நியாயமானதாகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, தொழிலாளர் துறை ஆலோசனை சேவைகளை வழங்கவும் எந்தவொரு கேள்விகளுக்கும் பதிலளிக்கவும் தயாராக உள்ளது என்று ஸ்டிவன் குறிப்பிட்டார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிமின் இந்த அறிவிப்பைத் தனது அமைச்சகம் வரவேற்பதாக சிம் கூறினார்.
இந்த அறிவிப்பு நாடு தழுவிய அளவில் பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 23, 2025, 6:24 pm
அனைத்து இன மக்களின் நலன், பொருளாதாரத்தை பாதுகாக்கும் பிரதமருக்கு நன்றி: டத்தோஸ்ரீ ரமணன்
July 23, 2025, 5:05 pm