
செய்திகள் மலேசியா
ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது இந்திய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்: டத்தோ சரவணக்குமார்
கோலாலம்பூர்:
ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது இந்திய மக்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதியாகும்.
சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை கூறினார்
இந்து மக்களின் நம்பிக்கையையும் அவர்களின் உணர்வையும் சம்பந்தப்பட்டவர்கள் அவமதித்து உள்ளனர்.
குறிப்பாக சமூக ஊடகங்களின் வாயிலாக அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் இந்து மக்களை பெருமளவில் புண்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் தான் அவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் போலிஸ் புகார்கள் செய்யப்பட்டன.
இதன் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என ஏஜிசி கூறியுள்ளது.
இதனை பிரதமர் துறை சட்ட பிரிவுகளுக்கான அமைச்சர் மக்களவையில் தெரிவித்தார்.
அவரின் இந்த அறிவிப்புகள் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக சட்ட விதிகள் ஒரு இன மக்களுக்கு மட்டுமா என்ற கேள்விகளும் பரவலாக எழுந்துள்ளது.
ஆக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய உரிய நடவடிக்கைகள் எடுப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
இதுவே எனது மிகப் பெரிய கோரிக்கையாகும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 24, 2025, 10:49 am
100 ரிங்கிட் சிறிய உதவித் தொகையல்ல; அரசாங்கத்தின் முயற்சிக்குக் குறை கூற : பிரதமர் அன்வார்
July 24, 2025, 10:12 am
பத்து பூத்தே விவகாரம் : மகாதீரின் மறுபதிலுக்குக் கருத்துக் கூற பிரதமர் அன்வார் மறுப்பு
July 24, 2025, 7:10 am