நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாஸ் கட்சியின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்க சனுசி தயாராக இல்லை

அலோர் ஸ்டார்: 

கெடா மந்திரி புசார் சனுசி நோர் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவியை ஏற்கத் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார். 

பாஸ் கட்சியின் உயர்மட்டத் தலைமையின் வெளிப்படையான ஆதரவைப் பெற்ற பிறகும் அவர் அந்தப் பதவியை ஏற்கத் தயாராக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

அப்பதவிக்கு மிகவும் பொருத்தமான, நம்பகமான மற்றொரு வேட்பாளர் இருந்தால், இரண்டாமட்ட தலைவர் வரிசையில் நீடிப்பதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்.

அப்பதவியில் தகுதியானவர்கள் இருக்க வேண்டும் என்று தாம் கருதுவதாகவும் சனுசி தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset