நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காற்று தூய்மைக்கேடு குறியீடு 200-ஐ தாண்டினால் இயங்கலை கற்றல் கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: ஃபட்லினா சிடேக்

கோலாலம்பூர்:

காற்று தூய்மைக்கேடு குறியீடு 200-ஐ தாண்டும்போது இயங்கலை வழியாக வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கை செயல்படுத்தப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்தது.

கல்வி அமைச்சு ஏற்கனவே வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளதோடு, அவை அனைத்துப் பள்ளிகளுக்கும் நடப்பில் உள்ள செயல்பாட்டு தர விதிமுறைக்குப் பொருந்தும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.

வழிகாட்டுதல்கள்படி காற்று தூய்மைக்கேடு குறியீடு 100-க்கும் அதிகமாக இருந்தால் வெளிப்புற நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது மற்றும் 200-க்கு மேல் இருந்தால் இணையம் வழி கற்றல் கற்பித்தல் நடைபெறும் என்றார் அவர்.

கோலாலம்பூரில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான இலக்கவியல் பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப விருது விழாவிற்குப் பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset