நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிதியுதவி, பொது விடுமுறை, பெட்ரோல் விலை குறைவு உட்பட பிரதமரின் சிறப்பு அறிவிப்புகளுக்குப் பொது மக்கள் வரவேற்பு 

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வாழ்க்கைச் செலவு நிவாரண நடவடிக்கைகள் குறித்த பல அறிவிப்புகளை மலேசியர்கள் வரவேற்றுள்ளனர்.

முன்னதாக, பிரதமர் அன்வார் இன்று 100 ரிங்கிட் உதவி தொகை,  RON95 பெட்ரோல் விலையில் குறைப்பு, செப்டம்பர் 15 பொது விடுமுறை உட்பட மேலும் பல அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். 

பிரதமரின் அறிவிப்பைத் சமூக ஊடகங்களில் பொது மக்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர். 

மைகாட்டில் நேரடியாக வரவு வைக்கப்படும் மற்றும் .

100 ரிங்கிட்டில் மூன்று மூட்டை அரிசி வாங்க முடியும். இவ்வளவு பெரிய தொகையை வேறு யார் எங்களுக்குத் தருவார்கள் என்று Hamdiah Yakop கருத்து பகிர்ந்துள்ளார். 

மலேசியா தினத்திற்கு முன்னதாக செப்டம்பர் 15 ஆம் தேதி கூடுதல் பொது விடுமுறை அறிவிப்பும் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

செப்டம்பர் 15 பொது விடுமுறைக்கு நன்றி, அன்வார் என்று X பயனர் @naya கூறினார்.

குறைந்த மின்சாரக் கட்டணங்களும் மலிவான RON95 பெட்ரோலும் எங்கள் மாதாந்திர செலவுகளில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை பல குடும்பங்களின் மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று ரோஸ்னிசான் யாகுல்டின் மேலும் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset