
செய்திகள் மலேசியா
புகைமூட்டம் ஏற்படும் அபாயம் அதிகரிப்பு: பொது மக்கள் விழிப்புடன் செயல்பட பேரரசர் உத்தரவு
கோலாலம்பூர்:
புகைமூட்டம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில் மலேசியர்கள் விழிப்புடன் செயல்படுமாறு பேரரசர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய நிலை பொது சுகாதாரத்தையும், குறிப்பாக குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களையும் பாதிக்கக்கூடும் என்று பேரரசர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் தங்கள் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
காற்று மாசுபாடு குறியீட்டை (API) அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.
வெப்பமான மற்றும் வறண்ட சூழ்நிலை தீ வேகமாகப் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று பேரரசர் தனது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
திறந்த வெளியில் எரிப்பதை எதிர்த்து அமலாக்கத்தை அதிகரிக்குமாறு சுல்தான் இப்ராஹிம் அதிகாரிகளை வலியுறுத்தினார்.
காரணம் இது நாட்டின் காற்றின் தரத்தை மேலும் மோசமாக்கும் என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 23, 2025, 6:24 pm
அனைத்து இன மக்களின் நலன், பொருளாதாரத்தை பாதுகாக்கும் பிரதமருக்கு நன்றி: டத்தோஸ்ரீ ரமணன்
July 23, 2025, 5:05 pm