நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ்: மலேசியாவிற்கு 11-ஆவது இடம்

கோலாலம்பூர்:

உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழுக்கான தர வரிசையில் மலேசியா 11-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 

Henley Passport Index. எனப்படும் உலக நாடுகளின் கடப்பிதழ்களை மதிப்பிட்டு தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழுக்கான தர வரிசையில் சிங்கப்பூர் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

சிங்கப்பூர்க் கடப்பிதழைக் கொண்டு விசா இல்லாமல் 193 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்.

ஜனவரியில் வெளியான அறிக்கையிலும் சிங்கப்பூர்க் கடப்பிதழ் முதல் இடத்தைப் பெற்றிருந்தது.

இன்று வெளியான அறிக்கையில் இரண்டாம் நிலையில் ஜப்பானும் தென்கொரியாவும் இடம்பெற்றன.

அவற்றின் கடப்பிதழைக் கொண்டு விசா இல்லாமல் 190 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்.

மூன்றாம் இடத்தை டென்மார்க், பின்லந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லந்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பகிர்ந்து கொண்டன.

- அஸ்வினி செந்தாமரை

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset