
செய்திகள் மலேசியா
100 ரிங்கிட் தேவையில்லை என நினைப்பவர்களின் உதவித் தொகை ஆண்டு இறுதியில் மீட்டுக் கொள்ளப்படும்: பிரதமர்
புத்ராஜெயா:
100 ரிங்கிட் தேவையில்லை என நினைப்பவர்களின் உதவித் தொகை ஆண்டு இறுதியில் மீட்டுக் கொள்ளப்படும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை நினைவுறுத்தினார்.
18 வயது, அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு மலேசியருக்கு 100 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அடிப்படை ரஹ்மா உதவித் தொகை திட்டத்தின் கீழ் இம்மானியம் வழங்கப்படவுள்ளது.
வரும் ஆகஸ்ட் 31 முதல் டிசம்பர் 31 வரை நாடு முழுவதும் உள்ள மைடின், லோட்டஸ், எக்கோன் சேவ், 99 ஸ்பீட்மார்ட் போன்ற முக்கிய பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள் உட்பட 4,100க்கும் மேற்பட்ட கடைகளில் அடிப்படைப் பொருட்களை வாங்குவதற்கு செலவிடலாம்.
மேலும் இது குடும்பத்திற்கான உதவித் தொகை அல்ல. ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து 18 வயது அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த 100 ரிங்கிட் வழங்கப்படும்.
இந்நிலையில் நம்மில் பலர் 100 ரிங்கிட் தேவை இல்லை. இந்த உதவி தேவையில்லை என்று நினைக்கலாம்.
அப்படி ஆண்டு இறுதிக்குள் செலவிடப்படாத உதவித் தொகையை மீட்டுக் கொள்ளப்படும்.
மேலும் அடுத்த ஆண்டு பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான உதவித் திட்டத்திற்கு இத்தொகையை அரசாங்கம் மறுபகிர்வு செய்யும் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 23, 2025, 6:24 pm
அனைத்து இன மக்களின் நலன், பொருளாதாரத்தை பாதுகாக்கும் பிரதமருக்கு நன்றி: டத்தோஸ்ரீ ரமணன்
July 23, 2025, 5:05 pm