
செய்திகள் மலேசியா
பல்வேறு உதவிகள் மூலம் மக்களின் சுமையைக் குறைக்கும் மடானி அரசின் உறுதிப்பாட்டை பிரதமரின் இன்றைய அறிவிப்புகள் நிரூபித்துள்ளது: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
பல்வேறு உதவிகள் மூலம் மக்களின் சுமையைக் குறைக்கும் மடானி அரசின்உறுதிப்பாட்டை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் இன்றைய அறிவிப்புகள் நிரூபித்துள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அறிவித்ததற்காக பிரதமருக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மடானி அரசாங்கத்தின் மக்களின் நாடித் துடிப்பை அறிந்து பல்வேறு வகையான உதவிகள் மூலம் சுமையைக் குறைப்பதற்கான அதன் உறுதிப்பாட்டையும் இன்றைய அறிவிப்புகள் நிரூபிக்கிறது.
அதே நேரத்தில், நாட்டின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கான தேவையை மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் பொறுப்புடன் சமநிலைப்படுத்த மடானி அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும்.
அறிவிக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் கவனமாக பரிசீலிக்கப்பட்டதன் வாயிலாக எடுக்கப்பட்ட முடிவுகளாகும்.
மேலும் சமூக நீதி, பொருளாதார நிலைத்தன்மையின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.
இந்தத் திட்டங்கள் பொருளாதார வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். மக்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
மேலும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ளும் நாட்டின் நிதி மீள்தன்மையை வலுப்படுத்தும்.
ஆகவே சுதந்திர தினம், மலேசிய தின கொண்டாட்டங்களுக்கான பிரதான குழுவின் தலைவரான ஃபஹ்மி,
தாய் நாட்டின் மீதான அன்பின் உணர்வைத் தூண்ட அனைத்து மலேசியர்களையும் அன்புடன் அழைத்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 23, 2025, 6:24 pm
அனைத்து இன மக்களின் நலன், பொருளாதாரத்தை பாதுகாக்கும் பிரதமருக்கு நன்றி: டத்தோஸ்ரீ ரமணன்
July 23, 2025, 5:05 pm