நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரஹ்மா மடானி  விற்பனை திடத்தின் ஒதுக்கீடு 600 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிப்பு: பிரதமர்

புத்ராஜெயா:

ரஹ்மா மடானி விற்பனை திடத்தின் ஒதுக்கீடு 600 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

முன்னர் அறிவிக்கப்பட்ட 300 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ரஹ்மா மடானி விற்பனைக்கான ஒதுக்கீடு 600 மில்லியன் ரிங்கிட்டாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் ஒதுக்கீடு நாடு முழுவதும் உள்ள 600 மாநில சட்டமன்றங்களையும் உள்ளடக்கிய இடங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துப்ப்டும்.

மக்களுக்கு பரந்த தேர்வை வழங்குவதற்காக பொருட்களின் வகைகளை அதிகரிக்கப்படும்.

இன்று தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட மலேசிய மக்களுக்கு பிரதமரின் பாராட்டு அறிவிப்பை வெளியிடும் போது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset