நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

7 மாதங்களுக்கு சராசரியாக 2,293 நோயாளிகள் இருதய அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்

புத்ராஜெயா:

7 மாதங்களுக்கு சராசரியாக 2,293 நோயாளிகள் இருதய அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.

சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஜூல்கிப்ளி அஹ்மத் இதனை கூறினார்.

அரசு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சைக்காக மொத்தம் 2,293 நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர்.

கரோனரி தமனி பைபாஸ் கிராஃப்டிங், இதய வால்வு அறுவை சிகிச்சை போன்ற முக்கிய நடைமுறைகளுக்கான சராசரி காத்திருப்பு ஏழு மாதங்கள் ஆகும்.

குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சைக்காக, 603 விருப்ப நோயாளிகள் காத்திருக்கின்றனர்,

இவர்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் 21 மாதங்கள் ஆகும்.

சுகாதார அமைச்சின் ஏழு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை சேவைகள் வழங்கப்படுகிறது.

மேலும் குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சை தற்போது வயது வந்தோருக்கான இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களால் செய்யப்படுகிறது.

கூடுதலாக தேசிய இதய நிறுவனத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறது என்று அவத் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset