நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிரீன் பேக்கெட் நிறுவனத்தின் அடுத்த அத்தியாயத்தை ஒன்றாக முன்னோக்கி கட்டமைக்கத் தயார்: டத்தோ வீரா ஷாகுல் தாவூத்

பெட்டாலிங்ஜெயா:

கிரீன் பேக்கெட் நிறுவனத்தின் அடுத்த அத்தியாயத்தை ஒன்றாக முன்னோக்கி கட்டமைக்கத் தயாராக உள்ளேன்.

அந்நிறுவனத்தின் புதிய தலைமை இயக்குநரும் நிர்வாக அதிகாரியுமான டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இதனை கூறினார்.

கிரீன் பேக்கெட் பெர்ஹாட்டின் முதன்மை பதவியில் அடியெடுத்து வைப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

கிரீன் பேக்கெட் மலேசியாவின் முன்னோடி தொழில்நுட்ப யூனிகார்ன்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.

இதற்கு தனது துணிச்சலான லட்சியம், புதுமை, புத்தாக்க படைப்புகளும் ஒரு சான்றாகும்.

இதன் மூலம் மகத்தான ஆற்றலைக் கொண்ட ஒரு நிறுவனமாக கிரீன் பேக்கெட் நிற்கிறது.

மேலும் இந்நிறுவனம் மாற்றம், உள்ளடக்கம், அர்த்தமுள்ள தாக்கத்திற்கான ஒரு தளமாக உருவாகத் தயாராக உள்ளது.

இந்தப் பணியில் பணியாற்றுவதுடன் கிரீன் பேக்கெட்டின் அடுத்த அத்தியாயத்திற்கு பங்களிக்க எனக்கு வாய்ப்பளித்த குழுமத்தின் தலைவர்,  இயக்குநர்கள் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழில்நுட்பம் வணிகங்களையும் சமூகங்களையும் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும் உள்ளடக்கிய, நிலையான இலக்கவியல் பொருளாதாரத்தை வடிவமைக்கும் ஒரு ஆர்வமுள்ள குழுவுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இந்தப் பயணத்தில் பகிரப்பட்ட பார்வை, தைரியம், அர்ப்பணிப்பு தேவை.

நான் ஒன்றாக முன்னோக்கி கிரீன் பேக்கெட்டை மீண்டும் கட்டமைக்கத் தயாராக இருக்கிறேன் என்று டத்தோ வீரா ஷாகுல் தாவூத் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset