நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோ லோ இங்கிலாந்தில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்ய ஆஸ்திரேலியாவின் போலி கடப்பிதழை பயன்படுத்தினார்: பத்திரிகையாளர்

கோலாலம்பூர்:

ஜோ லோ இங்கிலாந்தில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்ய ஆஸ்திரேலியாவின் போலி கடப்பிதழை பயன்படுத்தி உள்ளார்.

புலனாய்வு பத்திரிகையாளரான டோம் ரைட் இதனை கூறினார்.

ஜோ லோ போலி ஆஸ்திரேலிய கடப்பிதழை பயன்படுத்தி இங்கிலாந்திப் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போலி கடப்பிதழில் இருந்து விவரங்கள், பெயர், பிறந்த தேதி ஆகியவை விஸ்டம் ஓபன்ஸ்டோ டெக்னாலஜி சர்வீஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் திறக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் கடந்த மார்ச் 13 அன்று தெற்கு கிளாமோர்கனில் உள்ள கார்டிஃபில் பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரியுடன் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுடனான லோவின். தொடர்புகள்,  ஹாங்காங்குடனான சாத்தியமான தொடர்புகள் குறித்து புதிய தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன என்று அவர் ஒரு பதிவில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset