
செய்திகள் மலேசியா
ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் வோங் மீதான நடவடிக்கைக்கு வலுவான ஆதாரங்கள் இல்லாதது ஒரு சாக்குப்போக்கு மட்டுமே: டத்தோ சிவக்குமார்
கோலாலம்பூர்:
ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் வோங் மீதான நடவடிக்கைக்கு வலுவான ஆதாரங்கள் இல்லாதது ஒரு சாக்குப்போக்கு மட்டுமே.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
பிரதமர் துறையின் சட்டம், நிறுவன சீர்திருத்தம் அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் அளித்த பதிலில் நான் வருத்தமும் அதிருப்தியும் அடைந்துள்ளேன்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது சர்ச்சைக்குரிய ஜம்ரி வினோத், ஃபிர்டாப்ஸ் வோங் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற விசாரணை, சட்ட நடவடிக்கை தொடர முடியாது.
காரணம் அவர்கள் இருவரிடமும் குற்றம் சாட்டப்பட வேண்டிய எந்தவொரு குற்றத்தின் கூறுகளையும் நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை.
அமைச்சரின் கூற்றுப்படி அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட வேண்டிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று ஏஜிசி கூறிவிட்டதாக தெரிவித்தார்.
இனவெறி, பிற மதங்களை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட வேண்டிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்கிறார்கள்.
இந்த அபத்தமான பதில். மிகவும் வேடிக்கையாக உள்ளது.
சமூக ஊடகங்களின் வாயிலாக 3ஆர் தொடர்பான கருத்துக்களை அவர்கள் வெளியிட்டது அனைவருக்கும் தெரியும்.
இது மலேசிய மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்திது.
மேலும், போதுமான ஆதாரங்கள் இல்லையென்றால், மக்கள் ஏன் அடிக்கடி அவர்களுக்கு எதிராக போலிஸ் புகார்களை செய்கிறார்கள்.
போலிஸ்படையை சவால் செய்ய விரும்புகிறார்களா? உண்மை இல்லாமல் யாரும் புகார் செய்ய மாட்டார்கள்.
அப்படியானால் இந்த விவகாரத்தில் வெளிப்படையான நீதி எங்கே என்பது தான் என்னுடைய கேள்வியாகும்.
அதே வேளையில் மலேசியர்களிடையே நல்லிணக்கத்தை மாசுபடுத்தும் இந்த முக்கியமான பிரச்சினைகளில் கைகளை கழுவும் அணுகுமுறையாக நான் பார்க்கிறேன்.
ஒற்றுமை நிலைநாட்டப்படுவதுடன் மலேசியர்கள் எப்போதும் ஒன்றுபட வேண்டும் என்பதை பிரதமர் எப்போதும் நமக்கு நினைவூட்டுகிறது
ஆனால் இதுபோன்ற நபர்கள் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ விரும்பும் பொது மக்களும் எப்போதும் ஒரு தடையாக இருந்து வருகின்றனர்.
ஆக எதிர்காலத்தில் வெளிப்படைத்தன்மை, நீதி நிறைவேற்றப்பட வேண்டும் என்று தாம் நம்புவதாக டத்தோ சிவக்குமார் கூறினார்.
டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் துணிச்சல் ஏன் மற்றவர்களுக்கு வரவில்லை?
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் துணிச்சலாக குரல் கொடுத்துள்ளார்.
டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் துணிச்சலுக்கு ஒட்டுமொத்த இந்திய சமுதாயம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் இந்த விவகாரத்தில் அரசாங்கத்தில் உள்ள தலைவர்களும் மற்றவர்களும் குரல் கொடுக்காது வருத்தமளிக்கிறது.
ஆகவே இவ்விவகாரத்தில் ஒட்டுமொத்த இந்திய சமுதாயமும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் கேட்டு கொண்டார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm