
செய்திகள் மலேசியா
3ஆர் விதி என்பது ஒரு மதத்தினரின் நம்பிக்கையை மட்டும் பாதுகாக்கக் கூடாது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சாடல்
கோலாலம்பூர்:
நாட்டில் 3ஆர் விதி என்பது ஒரு மதத்தினரின் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காக மட்டும் இருக்கக் கூடாது.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு சாடினார்.
சர்ச்சைக்குரிய ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் வோங் மீது வழக்குத் தொடராத ஏஜிசியின் முடிவு குறித்து மஇகா கேள்வி எழுப்புகிறது.
3ஆர் எனப்படும் மதம், இனம், ஆட்சியாளர்கள் விதி ஒரு மதத்திற்கு மட்டுமல்ல என்பதை நாங்கள் அவர்களுக்கு நினைவூட்டியது.
மேலும் மலேசியாவில் உள்ள அனைத்து சமூகங்களிலும் மத நல்லிணக்கம், பொது ஒழுங்கு, சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க 3ஆர் விதிகள் உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மௌனம் என்பது நடுநிலைமையின் ஒரு வடிவம் அல்ல. அது ஒரு வகையான உடந்தையாகும்.
ஆக இன்று மலேசியாவில் 3ஆர் கொள்கைக்கு ஏதேனும் அர்த்தம் இருந்தால்,
அது அனைத்து மதத்தினரின் நம்பிக்கைகளுக்கும் நியாயமாகவும், உறுதியாகவும், நேர்மையுடனும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக பிரதமர் துறையின் சட்டம், நிறுவன சீர்திருத்தம் அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் சைட்,
ஆதாரங்கள் இல்லாததால் ஜம்ரி, ஃபிர்டாவ்ஸ் மீது குற்றஞ்சாட்ட வேண்டாம் என்று ஏஜிசி முடிவு செய்ததாக மக்களவையில் கூறினார்.
டத்தோஸ்ரீ அஸாலினாவின் விளக்கம் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.
மேலும் ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது மதம் பாதிக்கப்படும்போது மட்டுமே 3ஆர் விதி அமல்படுத்துவதும்,
அதே நேரத்தில் மற்ற சமூகங்களின் துயரத்தில் புறக்கணிக்கப்படுவது நியாயம் இல்லை.
இத்தகைய மனப்பான்மை, ஆபத்தான, ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பாரபட்சக் கொள்கையை பிரதிபலிக்கிறது.
மேலும் பல்லின, பல மத சமூகத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அமலாக்கம் அரசியலமைப்பு சட்டத்தின் 8ஆவது பிரிவின் உணர்வுக்கு எதிரானதாக உள்ளது.
குறிப்பாக நமது சட்ட அமைப்பின் நியாயத்தன்மை, நம்பகத்தன்மையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைக்கும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm