
செய்திகள் மலேசியா
கடந்த ஒரு வருடத்தில் 157 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை தேசிய தணிக்கைத் துறை மீட்டெடுத்துள்ளது
புத்ராஜெயா:
கடந்த ஒரு வருடத்தில் 157 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை தேசிய தணிக்கைத் துறை மீட்டெடுத்துள்ளது.
தேசிய தலைமை தணிக்கையாளர் டத்தோஸ்ரீ வான் சுராயா வான் முகமட் ரட்சி இதனை கூறினார்.
2024 முதல் இந்த ஆண்டு ஜூன் வரை மேற்கொள்ளப்பட்ட தணிக்கைகள் மூலம் தேசிய தணிக்கைத் துறையால் மொத்தம் 157.73 மில்லியன் ரிங்கிட் மீட்கப்பட்டுள்ளது.
அபராதங்கள், நிலுவையில் உள்ள வாடகை, நிலுவையில் உள்ள நில குத்தகைகள், நிலுவையில் வரிகள் வசூல் மூலம் இந்தத் தொகை வசூலிக்கப்பட்டது.
1957 ஆம் ஆண்டு தணிக்கைச் சட்டத்தின் (சட்டம் 62) திருத்தங்கள், அரசாங்கத்திடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெறும் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் உட்பட பிற அமைப்புகளைத் தணிக்கை செய்ய தலைமைத் தணிக்கையாளருக்கு அதிகாரம் அளிக்கிறது.
இது பொதுப் பணத் தணிக்கையைப் பின்பற்றுங்கள் என்ற புதிய அணுகுமுறையின் மூலம் பொது நிதியைக் கண்காணிப்பதாகும்.
தேவைப்பட்டால் ஏதேனும் வழிகாட்டுதல்களை வெளியிடுவது, பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க கடுமையான தவறான நடத்தைகளை நிவர்த்தி செய்வதில் ஏதேனும் பரிந்துரைகளை வழங்கப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கெசட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 1,856 அரசு நிறுவனங்கள் சுய தணிக்கை அமைப்பு மூலம் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
ஏழு அமைச்சுகளை உள்ளடக்கிய ஐந்து தணிக்கைகள் நடத்தப்பட்டுள்து.
தணிக்கை செய்யப்பட்ட திட்டங்களின் மொத்த செலவு 48.873 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளதாகவும் வான் சுரயா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm