நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஆர்எம் வெட்ரன் கால்பந்து போட்டியில் போர்ட் ரேஞ்சர்ஸ் அணியினர் சாம்பியன்

சிரம்பான்:

எம்ஆர்எம் வெட்ரன் கால்பந்து போட்டியில்  போர்ட் ரேஞ்சர்ஸ் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

எம்ஆர்எம் கால்பந்து கிளப்பின் ஏற்பாட்டில் இந்த வெட்ரன் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.

கிட்டத்தட்ட 16 அணிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.

இதில் போர்ட் ரேஞ்சர்ஸ் அணியினர் சிறப்பான திறனை வெளிப்படுத்தி முதல் நிலையில் வெற்றி பெற்றனர்.

வெற்றிப் பெற்ற அவ்வணியினருக்கு 8,000 ரிங்கிட்டும் வெற்றி கிண்ணமும் பரிசாக வழங்கப்பட்டது.

பினாங்கு ஸ்போர்ட்ஸ் கிளப்பினர் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றனர்.

கைய்லி அணியின் மூன்றாவது இடத்தையும் கங்கார் பூலாய் அணியினர் நான்காவது இடத்தை பிடித்தனர்.

வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

எம்ஆர்எம் கால்பந்து கிளப்பின் தலைவர் ஹஸ்மா முகமத் இட்ரிஸ், துணைத் தலைவர் லத்திவ் ஆகியோர் பரிசுகளை எடுத்து வழங்கினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset