
செய்திகள் மலேசியா
பந்திங் வட்டாரத்தில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும: பாப்பாராயுடு
பந்திங்:
சிலாங்கூரில் மிக உயர்ந்த அளவில் காற்று மாசுபாட்டு குறியீட்டு பதிவான பகுதிகளில் ஒன்றாகப் பந்திங் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடிக்கும்படி பந்திங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.பாப்பாராய்டு வலியுறுத்தினார்.
தங்களின் சொந்த ஆரோக்கியத்திற்கும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கும் எப்போதும் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
புகைமூட்டப் பிரச்சனை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு வெளிப்புற நடவடிக்கைகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
வெளியே செல்ல வேண்டிய அவசியமிருந்தால் என்95 வகை முகக் கவசத்தை பயன்படுத்துவதோடு வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் எப்போதும் மூடப்பட்டிருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன் நீடித்த இருமல், மூச்சுத் திணறல் அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறவும்.
ஆரோக்கியம் என்பது நமது பொதுவான பொறுப்பு என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான பாப்பாராயுடு கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm