நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோழி முட்டை மானியத்தை குறைக்கும் நடவடிக்கையின் மூலம் அரசாங்கம் ஒரு மாதத்திற்கு 45 மில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்துகிறது: மாட் சாபு

கோலாலம்பூர்:

கோழி முட்டை மானியத்தை குறைக்கும் நடவடிக்கையின் மூலம் அரசாங்கம் ஒரு மாதத்திற்கு 45 மில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்துகிறது.

வேளாண்மை உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முகமது சாபு மக்களவையில் இதனை  கூறினார்.

கடந்த மே 1 ஆம் தேதி தொடங்கிய கோழி முட்டை மானியக் குறைக்கும் நடவடிக்கை அமலுக்கு வந்தது.

இதன் மூலம் அரசாங்கம் ஒரு மாதத்திற்கு 45 மில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்துகிறது.

மானியக் குறைப்பு ஆகஸ்ட் 1 முதல் முழுமையாக நிறுத்தப்படுவதற்கு முன் மூன்று மாதங்களுக்கு அரசாங்கத்திற்கு 135 மில்லியன் ரிங்கிட் வரை சேமிப்பை வழங்கும்

அரசாங்கம் அறிவித்தபடி, கோழி முட்டை மானியம் ஒரு முட்டைக்கு 10 சென்னில் இருந்து 5 சென் ஆக மானிய விகிதத்தில் குறைப்புடன் தொடங்கி மே 1 முதல் ஜூலை 31 வரை கட்டங்களாக நிறுத்தப்படும்.

மானியச் செலவினங்களைக் குறைப்பதன் மூலம் சேமிப்பு, சந்தையில் முட்டை சந்தையில் ஏற்படும் தாக்கம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவில் ஏற்படும் தாக்கம் குறித்து பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது புசி எழுப்பிய  கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset