
செய்திகள் மலேசியா
துன் மகாதீர், டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி இடையேயான அவதூறு வழக்கு சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளது
கோலாலம்பூர்:
துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமது இடையேயான அவதூறு வழக்கு சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினரின் வழக்கறிஞர்களும் ஒரு உடன்பாட்டை எட்டியதாகவும், வழக்கைத் தொடரப் போவதில்லை என்றும் நீதிபதியிடம் தெரிவித்ததனர்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு சுமூகமாக தீர்க்கப்பட்டது. இதில் ஜாஹித், மகாதிர் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக குற்றம் சாட்டிய வழக்கும் அடங்கும்.
நீதித்துறை ஆணையர் கான் டெச்சியோங் இந்த விஷயத்தைத் தொடராததற்காக இரு தரப்பினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மீண்டும் தாக்கல் செய்ய சுதந்திரம் இல்லாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கான் கூறினார்.
ஒவ்வொரு தரப்பினரும் தங்கள் சொந்த செலவுகளை ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கடந்த ஜூலை 10 ஆம் தேதி 100 வயதை எட்டும் மகாதிர், குட்டி என்ற வார்த்தையை தனக்கு அவமானப்படுத்துவதாகக் கூறி ஜாஹித் மீது வழக்குத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm