நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாப்பா அருகே இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் மரணம்

தாப்பா:

தாப்பா அருகே இரண்டு வாகங்கள் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் மரணமடைந்தனர்.

பேரா  மாநில தீயணைப்பு, மீட்புத் துறை செயல்பாட்டுத் தலைவர் சபரோட்ஸி நோர் அகமது இதனை கூறினார்.

இன்று காலை வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் கிலோமீட்டர் 328.9 இல் இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாயின.

இந்த சம்பவம் காலை 11 மணியளவில் நடந்ததது.

அதில் ஒரு டொயோட்டா வியோஸ், ஒரு புரோட்டான் எக்ஸ் 50 ஆகியவை சம்பந்தப்பட்டதாகவும் ஆரம்ப விசாரணைகள் கண்டறிந்துள்ளதாகக் கூறினார்.

தாப்பா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு காலை11.19 மணிக்கு தகவல் கிடைத்தது. உடனே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இந்த விபத்தில் மொத்தம் ஆறு பேர் சிக்கினர். இதில்  டொயோட்டா வியோஸில் பயணித்த ஒரு ஆண் காயமடைந்தார்.

புரோட்டான் எக்ஸ் 50 இல் இருந்த ஐந்து முதியவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

மேலும் இருவர் காயமடைந்தனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset